
நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித ஜோசப் பள்ளியில் இன்று (03.07.2021) தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமசந்திரன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்லைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, குன்னூர் உதவி ஆட்சியர் செல்வி.தீபனா விஷ்வேஸ்வரி.இ.ஆ.ப., தொழிலாளர்த்துறை இணை ஆணையர் திரு. தங்கவேல், உதவி ஆணையர் திரு.சதிஷ் குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
