ஒத்த கருத்து உடையவர்கள், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் விருப்ப மனுக்கள் பெறலாம் மக்கள் நீதி மய்ய மன்றம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக தேமுதிக எங்களிடம் பேசவில்லை என்று கூறிய கமல் ஹாசன், கூட்டணி குறித்து சில கட்சிகள் தொடர்பு கொண்டு உள்ளனர், இது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஜினியின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.