சேலம் வடக்கு ஒன்றியம் பெருமாள் கோவில் அடிவாரம் மற்றும் ஏரி காலனி பகுதியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை , கழிவுநீர் வசதி உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பணிகளை துவக்கிவைத்தார்.மேலும்இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் ரெயின்போ நடராஜன், தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, சேலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மலர்கொடி ராஜா, மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேகரன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.