இந்தியாவை யாரும் மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது : மோடி பேச்சு
சுரு: ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, யாரிடமும் இந்தியா அடிபணியாது என்றார். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு தலைவணங்குவதாக கூறிய பிரதமர், நாடு பாதுகாப்பாக உள்ளதாக மக்களிடம் உறுதிகூறுவதாக தெரிவித்தார். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்ற அவர், இந்தியாவை யாரும் மிரட்டவும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.