தி.மு.க. சார்பில் தமிழகமெங்கும் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
     தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்டறிந்து பேசி வருகிறார்.
     இதன் தொடர்ச்சியாக சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி தொகுதி நங்கவள்ளி ஒன்றியம் சூரப்பள்ளி ஊராட்சி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள், அனைவரும் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டுகிறேன்.
     கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
     இவ்வாறு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் அவர் அதில் கூறியுள்ளார்.