சேலம் மாநகர் அம்மாபாளையம்,தனியார் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.வி. ராஜின், “ஏ.வி. ராஜு எனும் நான்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழக முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஆர். இளங்கோவன் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி. வெங்கடாஜலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் பி. மணி,ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சித்ரா குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.