சேலம் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.விழாவில் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒன்றிய கழகச் செயலாளர் ரெயின்போ நடராஜன், தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, சேலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மலர்கொடி ராஜா, மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேகரன், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.