ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்
தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சியில்  கட்டபட்டுவரும் 26 பசுமை வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்,ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளில்  ஊராட்சி துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கேர்மாளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில மருந்து இருப்பு படுக்கை  வசதிகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கவேண்டிய அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் சிகிச்சை முறை குறித்து  கேட்டறிந்தார் தமிழக கர்நாடக எல்லை கேர்மாளம் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டு வாகன தணிக்கையை   பார்வையிட்டார் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர்வசதி செய்து தரகோரியும்  மலைகிராமங்களில் தொலைதொடர்பு (செல்போன் சிக்னல்) சேவை இல்லாமல் அவதிபட்டு வருவதாகவும் தொலைதொடர்பு சேவை செய்து தரகோரி  மனுக்கள் அளித்தனர் ஆய்வின் போது ஊரக வளர்ச்சி  உதவி  இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  ஆனந்தன்,பிரேம்குமார், ஆகியோர் உடன்இருந்தனர்.