ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் வனச்சோதனைசாடியில் காட்டுபன்றிகறி கொண்டு சென்ற 3 பேருக்கு 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
ஈரோடு மவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகம் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது இதனால் எல்லையில் வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தணிக்கைக்கு பிறகே தமிழகத்திக்குள் அனுமதிக்கபடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுஇருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர் அதில் காட்டுபன்றி கறி இருந்தது தெரிவந்தது அவர்களை பிடித்து விசாரனை மேற்கொண்டதில் கேர்மாளம் கிராமத்தை சேர்ந்த மாதேவசாமி , மஞ்ஜெஷ்,மகேஷ் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் நொக்கனூர் பகுதியில் இருந்து காட்டுபன்றி கறியை எடுத்துவந்தது தெரியவந்து காட்டுபன்றி கறி எடுத்துவந்த குற்றத்திக்காக 3 பேருக்கும் ரூபாய் 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது