ஈரோடு மாவட்டம் தாளவாடி இருந்து தொட்டகாஜனூர்  செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் சில மரங்கள் காய்ந்து பட்டுபோய் கிடக்கிறது இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தாளவாடி சுற்றூவட்டார பகுதியில் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது அப்போது தாளவாடி இருந்து தொட்டகாஜனூர் சாலையில் இருந்து மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்து சாலையில் விழுந்தது மரம் விழுந்ததால் மின்கம்பம் ஒன்று முறிந்து அருகில் இருந்த கோழி கடைமீது விழுந்தது  உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை சாலையில் விழுந்த மரத்தை பொதுமக்கள் மூலம் அகற்றப்பட்டது இதனால் தாளவாடி டவுன் பகுதி முழுவதும் விடியவிடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது சேதாரம் ஆன மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் மின்சாரவாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.