வௌவால் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  • ¼ tsp மஞ்சள் தூள்
  •  1 tsp கொத்தமல்லி தூள்
  •  4 காஷ்மீரி ரெட் சில்லி
  •  கடலை மாவு
  •  எண்ணெய்
  •  இஞ்சி
  •  கறிவேப்பிலை
  •  பூண்டு

வௌவால் மீன் வறுவல் செய்முறை:

           முதலில் மசாலா விழுது தயாரிக்க வேண்டும். மிக்ஸியில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு,தண்ணீரில் ஊறவைத்த சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.

           அரைத்த மசாலாவில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து கலக்கவும். மீன் மசாலா இப்போது தயார். இந்த மசாலாவை எல்லா வகையான மீன் வறுவல்களுக்கும் பயன்படுத்தலாம்.

           அடுத்து ஒரு வௌவால் மீனை எடுத்து சுத்தம் செய்த பின்னர் மீனின் இரு புறங்களிலும் அரைத்த மசாலாவை தடவவும்

            மசாலா தடவிய மீனை 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றிய பின்பு மீனை சேர்த்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

            மீனை வறுக்கும் போது வாசனைக்காக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். மீன் வெந்த பிறகு சூடாக பரிமாறவும்

            இப்பொழுதுசூடான மற்றும் சுவையானதயார் வௌவால் மீன் வறுவல் தயார்.