பன்னீர் பட்டர் மசாலா மிகவும் சுவையான உணவு வகை இது பஞ்சாபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் மிக மிகப் பிரபலமானது. பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி, பரோட்டா, நான், புல்கா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்யதேவையான பொருட்கள்:

  •  250 g பன்னீர்
  •  1 பெரிய வெங்காயம்
  •  3 லவங்கம்
  •  2 தக்காளி
  •  1 இன்ச் பட்டை
  •  2 tsp முந்திரிப்பருப்பு
  •  3 ஏலக்காய்
  •  4 tsp தேக்கரண்டி வெண்ணெய்
  •  1 துண்டு இஞ்சி
  •  ½ tsp சீரகத்தூள்
  •  2 tsp சிவப்பு மிளகாய் தூள்
  •  6 பூண்டு பள்
  •  ½ tsp சர்க்கரை
  •  ¼ tsp காய்ந்த வெந்தய கீரை பொடி
  •  ¼ cup க்ரீம்
  •  கொத்தமல்லி சிறிதளவு
  •  உப்பு தேவையான அளவு

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை:

             பன்னீர் பட்டர் மசாலா செய்ய ஒரு கடாயில் 1 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 தக்காளிகள் நறுக்கியது ஆகியவற்றை சேர்க்கவும்.

             அதனுடன் 1 இன்ச் பட்டை, 3 ஏலக்காய், 3 லவங்கம் சேர்க்கவும்.

             மேலும் 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு, 1 சிறிய துண்டு இஞ்சி, 6 பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்க்கவும்.

             மேலும் 500 ml தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

             தக்காளி மென்மையாகும் வரை வெந்த பிறகு ஆறவைக்கவும்

             ஆறிய பின்னர் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

             வெண்ணெய் உருகியதும் 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

             குறைந்த தீயில் 2-3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கலக்கவும்.

            அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து, 1/2 தேக்கரண்டி சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலக்கவும்.

            மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

             பின்னர் 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1/4 தேக்கரண்டி வெந்தயக்கீரை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 1/4 தேக்கரண்டி பிரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.

             இப்பொழுது 250 கிராம் பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

             கடைசியாக சிறிதளவு பொடியாக நறுக்கியகொத்தமல்லி சேர்த்து கலக்கவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.