சுவையை தூண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி .
காய்கறி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- 3 tsp எண்ணெய
- 250 g பாசுமதி அரிசி
- 2 tsp நெய்
- 3 தக்காளி
- ¼ tsp இஞ்சி,பூண்டு விழுது.
- 1 cup பீன்ஸ் எல்லாம் சேர்த்து
- ¼ tsp பட்டை ,கிராம்பு, ஏலக்காய் விழுது
- 1 பச்சை மிளகாய்
- 4 tsp தயிர்
- கொத்தமல்லி
- புதினா
- வெங்காயம்,
- பச்சைப் பட்டாணி
- நறுக்கிய கேரட்,
- உருளைக்கிழங்கு
- உப்பு தேவையான அளவு.
காய்கறி பிரியாணி செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி,
2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
ருசியான காய்கறி பிரியாணி ரெடி…
