சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி*

உ.பி.: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில்  விவசாயிகளுக்கு ரூ6,000 நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார். 2018 டிசம்பர் 1 முதல் கணக்கிட்டு மார்ச் 31-க்குள் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும். 12 கோடி சிறு,குறு விவசாயிகளுக்கு நிதியுதவி தரும் திட்டம் ரூ.75 ஆயிரம் கோடியில் செய்யப்படுத்தப்படுகிறது .

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடக்கம்

சென்னை: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் மோடி துவங்கி வைத்த உடனே விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் ஏறிவிட்டது எனவும் கூறினார்.