உடல் எடையை குறைத்து ஸ்லிமாக்க உதவும் சுவையான அவல் உப்புமா
அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ½ ஸ்பூன் கடுகு
- 2 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- பெருங்காயத்தூள் சிறிதளவு
- மஞ்சள் தூள் சிறிதளவு
- கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- கொத்தமல்லித்தழை
- உப்பு தேவையான அளவு
அவல் உப்புமா செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து,
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊறவைத்த அவலை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்).
பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் சுவையான அவல் உப்புமா தயார்!
