குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஆரோக்கியமான “பருப்பு பூரி செய்யலாம் வாங்க .
பருப்பு பூரி தேவையான பொருட்கள்:
- 250 கிராம் கோதுமை மாவு
- 1 ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- ½ ஸ்பூன் மிளகுத்தூள்
- ½ ஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
பருப்பு பூரி செய்முறை:
பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
கோதுமை மாவை பிசைந்து பூரியாக செய்து வதக்கிய விழுதை சிறிதளவு எடுத்து வைத்து மூடி வைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான “பருப்பு பூரி” தயார்.
