இட்லிப் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் உளுந்து
- 3 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 10 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் வெள்ளை எள்
- ½ ஸ்பூன் பெருங்காயம்
- உப்பு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்..
வெறும் வாணலியில் உளுந்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகாய், எள் சேர்த்து லேசாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றுடன் பெருங்காயம், உப்பு சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப அரைக்கவும்.
சுவையான இட்லி பொடி தயார்….
