கத்திரிக்காய் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  •  1 பெரிய கத்திரிக்காய்
  •  2 கப்  பாஸ்மதி –
  •  1 வெங்காயம்
  •  1 தக்காளி
  •  6 பச்சை மிளகாய்
  •  3 கப் பால்(அ)தேங்காய்ப்பால்
  •  ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  •  ¼ ஸ்பூன்  மஞ்சள்தூள்
  •  1 ஸ்பூன்  நெய்
  •  1 ஸ்பூன்  சோம்பு
  •  உப்பு-எண்ணெய் – தேவைக்கு
  •  புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • வறுத்து பொடிக்க:
  •  3 ஏலக்காய்
  •  பட்டை – சிறு துண்டு
  •  4 கிராம்பு
  •  2 பிரியாணி இலை

செய்முறை:

            வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

           அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

           குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

          பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

          சுவையான கத்திரிக்காய் பிரியாணி தயா‌ர்…