ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்டது கும்டாபுரம் கிராமம் இங்கு சுமார் 300 க்கும் மேட்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் ஆழ்குழாய் கிணறு வற்ற தொடங்கியது குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர்வழங்க முடியவில்லை குடிநீர் முறையாக வழங்க கோரி நேற்று 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தாளவாடிவட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் ,ஊராட்சி தலைவர் திராஷாயிணிகுமார் ஆகியோர் தலைமையில் கும்டாபுரம் கிராமத்தில் உடனடியாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் பிரச்சனை நீங்கி நிம்மதி அடைந்தனர்….