உருளைக்கிழங்கு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
- 500 கிராம் உருளைக்கிழங்கு
- ¼ கப் அரைத்த தேங்காய்
- 3 ஸ்பூன் பொட்டுக்கடலை
- ஒரு பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 12 சின்ன வெங்காயம்
- சிறிது கொத்தமல்லி கருவேப்பிலை
உருளைக்கிழங்கு போண்டா செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைக்க அடுப்பில் சுடுதண்ணி வைத்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து பின்பு அரைக்கிலோ உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மிக்சி ஜாரில் போடவும், அத்துடன் கால் கப் அளவிற்கு திருவின தேங்காய், 3 தேக்கரண்டி பொட்டுக்கடலை, 1 தேக்கரண்டி சோம்பு,1தேக்கரண்டி மிளகாய்த்தூள்,1 தேக்கரண்டி கரம் மசாலா, 10 சின்ன வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை சிறிதளவு கையில் எண்ணெய் சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் பிடித்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயாராகிவிட்டது.
