இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

  •  2 ஸ்பூன்  எண்ணெய்
  •  சிறிதளவு – கடுகு ,உளுத்தம் பருப்பு,வெந்தயம்
  •  1 வெங்காயம்
  •  1 தக்காளி
  •  2 பச்சை மிளகாய்
  •  ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  •  கறிவேப்பிலை சிறிதளவு
  •  தேவைக்கேற்ப உப்பு
  •  1 கப்  துவரம் பருப்பு
  •  சிறிதளவு வெல்லம்
  •  பெருங்காயத்தூள்
  •  சிறிதளவு புளி

தூள் அரைப்பதற்கு தேவையானவை:

  •  4 வர மிளகாய்
  •  பெருங்காயம்
  •  ½ ஸ்பூன்  மிளகு
  •  ¼ ஸ்பூன்  வெந்தயம்
  •  1 ஸ்பூன்  கடலை பருப்பு
  •  1 ஸ்பூன்  துவரம் பருப்பு
  •  2 ஸ்பூன்  தனியா (Dhaniya)

இட்லி சாம்பார் செய்முறை :

முதலில் 10 நிமிடம் துவரம்பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும், அடுப்பில் குக்கர் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்த பின் சிறிதளவு கடுகு ,உளுத்தம் பருப்பு, வெங்காயம்,இரண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை, தக்காளி, போட்டு வதக்கவும்.

ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், வதக்கிய பின்பு சிறிதளவு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பருப்பு வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும், அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.

சிறிதளவு எண்ணெய் நான்கு வர மிளகாய், பெருங்காயம், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம், தனியா, இவை அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும், வறுத்தெடுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

இப்போது குக்கரை இறக்கி, வெந்த பருப்புடன் சிறிதளவு நீர்த்த புளித்தண்ணீர் சேர்க்கவும், அத்துடன் சிறிதளவு வெல்லம், அரைத்த சாம்பார் பொடியை சேர்த்து கலக்கவும்.

கலந்ததை ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

வாசனைக்காக சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து ஒரு வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

இப்போது சுவையான இட்லி சாம்பார்( Idli sambar) தயார் சூடான இட்லி வைத்து சுவைத்து மகிழுங்கள்..