ஃப்ரூட் ரைஸ் செய்யத்தேவையான பொருட்கள்:
- 1 கப் பாசுமதி அரிசி
- 4 ஸ்பூன் நெய்
- பட்டை, கிராம்பு
- ஏலக்காய் தலா – 2
- 1 ஸ்பூன் பிரியாணி மசாலா
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- நறுக்கிய பைனாப்பிள், நறுக்கிய ஆப்பிள், திராட்சைப்பழம் (சேர்த்து) ஒரு கப்
- புதினா, கொத்தமல்லித்தழ சிறிதளவு
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவைக்கேற்ப.
ஃப்ரூட் ரைஸ் செய்முறை :
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து… புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பழங்களை சேர்த்து, சாதத்தையும் போட்டுக் கிளறி, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகிகு இறக்கினால் சுவையான ஃப்ரூட் ரைஸ் ரெடி!!