கூடலூர் , ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பழங்குடினருக்கு மாவட்ட ஆட்சியரின் தனி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் வீடு வீடாக சென்று பழங்குடியினர் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஸ்ரீ மதுரை ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் சந்தியா மற்றும் செவிலியர்கள் போட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சுனில், ஒன்றிய கவுன்சிலர், கே.கே கங்காதரன், துணைத் தலைவர் ரஜி மேத்யூ, ஊரட்சி செயலாளர் சோனி, வார்டு உறுப்பினர்கள் , செவிலியர்கள் , ஆஷா ஆகியோர் தடுப்பு ஊசி பணியில் பங்கேற்றார்.ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.