சுவையை தூண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி .

காய்கறி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  •  3 tsp எண்ணெய
  •  250 g பாசுமதி அரிசி
  •  2 tsp நெய்
  •  3 தக்காளி
  •  ¼ tsp இஞ்சி,பூண்டு விழுது.
  •  1 cup பீன்ஸ் எல்லாம் சேர்த்து
  •  ¼ tsp பட்டை ,கிராம்பு, ஏலக்காய் விழுது
  •  1 பச்சை மிளகாய்
  •  4 tsp தயிர்
  •  கொத்தமல்லி
  •   புதினா
  •   வெங்காயம்,
  •  பச்சைப் பட்டாணி
  •  நறுக்கிய கேரட்,
  •  உருளைக்கிழங்கு
  •  உப்பு தேவையான அளவு.

காய்கறி பிரியாணி செய்முறை:

             முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

              பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.

              இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி,

               2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

               ருசியான காய்கறி பிரியாணி ரெடி…