கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமோசா மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் :
- 1 cup மைதா மாவு
- 1 tsp கார்ன் ஃப்ளார்
- 1 tsp ரவை
- ¼ tsp பேக்கிங் பவுடர்
- 1 ½ tbsp எண்ணெய்
- உப்பு – தேவையான அளவு
சமோசா மசாலா செய்ய தேவையான பொருட்கள்
- 2 cups ஸ்பினாஷ் கீரை (அ) பாலக் கீரை
- 2 உருளைக்கிழங்கு
- 1 வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் சீரகம்
- மல்லித் தழை -சிறிதளவு
- எண்ணெய்
கீரை சமோசா செய்முறை
முதலில் மைதாவில் உப்பு, சூடுபடுத்திய எண்ணெய், கார்ன் ஃப்ளார், ரவை, பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு கீரையை சுத்தம் செய்து சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.
மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த கீரை, மல்லித் தழை சேர்த்து வேக விட்டு நன்கு ஆற விடவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும்.
இதேபோல் அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சமோசாக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூடாக சுவையான கீரை சமோசா தயார்.
