உடலுக்கு குளிர்ச்சியூட்டும் மோர் குழம்பை எளிமையாக செய்வது குறித்து பார்க்கலாம்
மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- 1 வெங்காயம் சிறியது
- 250 ml கடைந்த மோர்
- ½ tsp சீரகம்
- பூண்டு – 2-3 பல்
- 1 இஞ்சி சிறியது
- ½ tsp மஞ்சள் தூள்
- ½ tsp மிளகாய் தூள்
- பெருங்காயம் – 2 சிட்டிகை
- தேங்காய் – 1 சில்லு
- 1 tsp கடுகு
- கறிவேப்பிலை – சிறு கொத்து
- உப்பு – தேவையான அளவு
மோர் குழம்பு செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கடலை மாவு இவற்றை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு மிதமான தீயில் காய வைக்கவும்.
எண்ணை காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வெந்தவுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் கொதிக்கவிடவும். இடையே கலக்கிவிடவும்.
இப்பொழுது மோர் சேர்த்து குறைவான தீயில் வேகவிடவும்.
குழம்பு பொங்கி வரும்போது அடுப்பை அனைக்கவும்.
இறக்கி வைத்து பறிமாரவும். இப்போது சுவையான மோர் குழம்பு (Mor Kuzhambu) தயார்…
