ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் வனப்பகுதி சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறுச்சோடி காணப்படுகிறது அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதனால் வனவிலங்குகள் சாலையில் ஜாலியாக உலா வருகிறது. இந்த நிலையில் ஒன்று சத்தியமங்கலம் இருந்து மைசூர் செல்லும் தேசியநெடுஞ்சாலை ஆசனூர் அடுத்த சீவக்காபள்ளம் இடத்தில் ஒற்றை யானை ஜாலியாக சாலையில் உலா வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின் யானை தானாக வனப்பகுதியில் சென்றது. வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்குமாறு வனத்துறை அறிவுருத்திவருகின்றனர்.