*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 13_*
*30.09.2019*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
புதிய நபர்களின் மூலம் நட்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : நட்புகள் கிடைக்கும்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நண்பர்களின் உதவியால் தொழிலில் வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். பெரியோர்களின் வழிகாட்டல் புதுவிதமான உத்வேகத்தை அளிக்கும். மனதில் தோன்றிய எண்ணங்களினால் வெற்றி காண்பீர்கள். புதிய இலக்கு மற்றும் யுக்திகளால் மாற்றமான சூழலும், மேன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : விவேகம் மேம்படும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
புனர்பூசம் : செயலில் காலதாமதம் ஏற்படும்.
பூசம் : வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம் : சாதகமான சூழல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கடல் மார்க்கப் பயணங்களால் லாபம் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளால் எண்ணிய பலன் கிடைக்கும். சிறிய பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல் அமையும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்தொழிலில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இறை வழிபாட்டில் நம்பிக்கை மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சிநேகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எண்ணிய லாபம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : சிநேகம் உண்டாகும்.
கேட்டை : லாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழில்கள் முனைய முயல்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வழக்காடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சியும், செல்வாக்கும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : முயற்சிகள் கைகூடும்.
பூராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய லாபம் உண்டாகும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பொதுத்தொண்டில் ஈடுபட்டோருக்கு எண்ணிய கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் கைகூடும். செலவுகள் குறைந்து சேமிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : பயணங்களால் லாபம் உண்டாகும்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகி சாதகமான முடிவு உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் தோன்றும். முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : பயணங்களால் லாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
