*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 14_*

*01.10.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????

*?மேஷம் ராசி*

அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நன்மையை தரும். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : அமைதி வேண்டும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.

*?ரிஷபம் ராசி*

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் சாதகமாக அமையும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழப்படுவீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

கிருத்திகை : மாற்றமான நாள்.

ரோகிணி : புகழ் உண்டாகும்.

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

*?மிதுனம் ராசி*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

புனர்பூசம் : பொருளாதாரம் மேம்படும்.

*?கடகம் ராசி*

வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடன்பிறப்புகளால் சுபவிரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.

பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

*?சிம்மம் ராசி*

மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். பிறரிடம் உங்களின் மதிப்பு உயரும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

*?கன்னி ராசி*

ஆன்மீக வழிபாட்டில் மனம் லயிக்கும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிர்வாக திறமைகள் புலப்படும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : இலாபகரமான நாள்
.
அஸ்தம் : திறமைகள் புலப்படும்.

சித்திரை : நினைவாற்றல் மேலோங்கும்.

*?துலாம் ராசி*

கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

சுவாதி : சேமிப்பு அதிகரிக்கும்.

விசாகம் : சாதகமான நாள்.

*?விருச்சகம் ராசி*

புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்க்கு சில விரயங்கள் உண்டாகும். உத்தியோஸ்தரர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இழுபறியான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

அனுஷம் : உயர்வு உண்டாகும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.

*?தனுசு ராசி*

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை மேலோங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : இலாபம் உண்டாகும்.

பூராடம் : ஒற்றுமை மேலோங்கும்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

*?மகரம் ராசி*

இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொன், பொருள்களின் சேர்க்கை உண்டாகும். தேவையற்ற எண்ணங்களால் மனம் சஞ்சலப்படும். தொழிலில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.

அவிட்டம் : தனலாபம் கிடைக்கும்.

*?கும்பம் ராசி*

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : அனுகூலமான நாள்
.
சதயம் : இலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.

*?மீனம் ராசி*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சார்ந்த பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : செலவுகள் உண்டாகும்.

ரேவதி : எச்சரிக்கை வேண்டும்.