*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_மாசி 22_*

*_05.03.2020_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். முயற்சிக்கேற்ற ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள். அறிமுகமில்லாதவர்களின் உதவியால் புதிய அனுபவம் உண்டாகும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.

பரணி : அனுபவம் கிடைக்கும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். வாக்குவன்மையால் சாதகமான பலன்கள் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : ஆதரவான நாள்.

மிருகசீரிஷம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எண்ண ஓட்டங்களில் முன்னேற்றம் உண்டாகும். சுயமுயற்சி சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். செயல்திறனில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை : செயல்பாடுகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சமூகப்பணியில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நன்மை உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

பூசம் : நன்மை உண்டாகும்.

ஆயில்யம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

சுயதொழில் புரிவோருக்கு அபிவிருத்திக்கான சூழ்நிலை உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத பொருள் வரவால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கூட்டுத்தொழிலில் இலாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். மனை தொடர்பான பணிகளால் இலாபம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : உறவுநிலை மேம்படும்.

சித்திரை : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குருமார்களின் ஆலோசனைகள் முன்னேற்றமான சூழ்நிலையை உருவாக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பங்காளி வகையில் இருந்துவந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

சித்திரை : முன்னேற்றமான நாள்.

சுவாதி : தீர்வு கிடைக்கும்.

விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய நபர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் மந்தமான நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேற காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். முகத்தோற்றம் பொலிவு பெறும். முயற்சிகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த சில சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மனதிற்கு விருப்பமானவர்களுக்காக சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சங்கீத துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மாற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.

திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

விவசாய பணிகளில் இலாபகரமான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன் நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுயதொழில் புரிவோருக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : இலாபகரமான நாள்.

சதயம் : ஆசைகள் நிறைவேறும்.

பூரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழில் சார்ந்த துறையில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நிர்வாகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தான் என்ற எண்ணத்தை குறைத்து கொள்வதன் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : புதிய இலக்குகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.

ரேவதி : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•