*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 15_*

*30.06.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் வருகையால் இலாபகரமான சூழல் அமையும். சொத்துச்சேர்க்கைக்கான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மனம் மகிழ்வீர்கள்.

பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.

கிருத்திகை : இலாபமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நீர் சம்பந்தமான தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமாகும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : தனவரவுகள் கிடைக்கும்.

மிருகசீரிடம் : விவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நன்கு சிந்தித்து செயல்படவும். சக ஊழியர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.

திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சி பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் பேசவும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

பூசம் : மகிழ்ச்சி பிறக்கும்.

ஆயில்யம் : கனிவுடன் பேசவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நண்பர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான முயற்சியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உலகத்தை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

நினைத்த காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

அஸ்தம் : விவேகம் வேண்டும்.

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் தொடர்பான முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை சரிபார்த்து செல்லவும். எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : கவனம் தேவை.

சுவாதி : பொறுமையை கடைபிடிக்கவும்.

விசாகம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு இலாபம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : இலாபம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : இடர்பாடுகள் குறையும்.

பூராடம் : ஆதரவுகள் பெருகும்.

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிரிந்த நண்பர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

செய்யும் பணிகளில் நிதானம் வேண்டும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது சிறப்பு. பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சியில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

சதயம் : அனுசரித்து செல்லவும்.

பூரட்டாதி : அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சகோதரர் வகையில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : வெற்றி காண்பீர்கள்.

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•