????????முத்தமிழ் டிவி????????
*இன்றைய ராசி பலன்கள்*

*ஆனி* ~ *16*
*01.07.2019*
*திங்கட்கிழமை*.

*?மேஷம் ராசி*

நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். எண்ணிய காரியங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : முடிவுகளில் நிதானம் வேண்டும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

*?ரிஷபம் ராசி*

விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். சகோதரர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய ஆடை மற்றும் அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

*?மிதுனம் ராசி*

தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நட்பு வட்டம் விரிவடையும். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : கடன்கள் குறையும்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பூசம் : இன்னல்கள் நீங்கும்.

*?கடகம் ராசி*

உத்தியோகஸ்தரர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். செய்யும் செயல்களால் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
ஆயில்யம் : அபிவிருத்தி உண்டாகும்.

*?சிம்மம் ராசி*

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : சாதகமான சூழல் நிலவும்.

*?கன்னி ராசி*

தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த காரியம் கைகூடும். அரசு அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.

*?துலாம் ராசி*

தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது சாதகமான பலனை அளிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். மனதில் இனம்புரியாத அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். சக ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். தந்தைவழி உறவுகளால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.

*?விருச்சகம் ராசி*

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நற்பலன்கள் கிடைக்கும்.
அனுஷம் : வெற்றி அடைவீர்கள்.
கேட்டை : மேன்மையான நாள்.

*?தனுசு ராசி*

வாழ்க்கையை பற்றி புரிதல் உணர்வு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத வீண் செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : செலவுகள் நேரிடலாம்.

*?மகரம் ராசி*

உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சவாலான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : சவாலான நாள்.

*?கும்பம் ராசி*

பணியில் மாற்றங்கள் நேரிடலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முயல்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மாற்றங்கள் நேரிடலாம்.
சதயம் : சேமிப்பு உயரும்.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

*?மீனம் ராசி*

குடும்பத்தில் இருக்கும் பணத்தட்டுபாடுகளை நீக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
?????????
?????????