*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 10_*

*_23.04.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். மனக்கவலைகளால் பணிகளில் காலதாமதம் உண்டாகும். வாகனப் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய செயல்திட்டங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஆதரவு அதிகரிக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை : கவலைகள் குறையும்.
புனர்பூசம் : காலதாமதம் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : கனவு நிறைவேறும்.
பூசம் : அன்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பழைய கடன்களால் சில மனவருத்தங்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : சுபிட்சமான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பூர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். இழந்த பொருளை மீட்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், வழிகாட்டுதலும் மனதிருப்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : திருப்திகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். நிர்வாகத் துறையில் செய்யும் மாற்றங்களின் மூலம் ஆதரவு உண்டாகும். தந்தையிடம் உரையாடும்போது அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஈடுபாடு வேண்டும்.
சுவாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : அமைதியை கடைபிடிக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வீண் குழப்பங்களால் உடல்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும். பேச்சுகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

விசாகம் : பணியில் கவனம் தேவை.
அனுஷம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனைகளால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : இலாபகரமான நாள்.
பூராடம் : நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புதிய தொழில் முயற்சியில் எண்ணிய இலாபம் உண்டாகும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் சற்று கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். இடமாற்றங்கள் புதிய அனுபவத்தை அளிக்கும். தெளிவான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் காரியசித்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதியவர்களின் வருகைக்காக சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•