*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 09_*
*_22.04.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பணி சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் இனம் புரியாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். இறை வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் கைக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
திருவாதிரை : முயற்சிகள் கைக்கூடும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் சம்பந்தமான பயணங்களால் சுபிட்சம் உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : தடைகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முயல்வீர்கள். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான சூழல் அமையும்.
பூரம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
உத்திரம் : பரிசுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பொதுச் செயல்களில் ஈடுபட்டு நற்பேறுகள் வாய்க்கப் பெறுவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அஸ்தம் : வாய்ப்புகள் அமையும்.
சித்திரை : முடிவுகள் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி :அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
விசாகம் : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமண வரன்கள் கைக்கூடும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான செயல்கள் உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : மனக்கசப்புகள் நீங்கும்.
அனுஷம் : ஆசிகள் கிடைக்கும்.
கேட்டை : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் சில விரயச்செலவுகள் நேரிடலாம். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதாயம் கிடைக்கும்.
பூராடம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
ஆபரணச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : பேச்சில் கவனம் தேவை.
அவிட்டம் : காலதாமதமாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
சுபச் செயல்கள் கைக்கூடும். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு மேம்படும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த ஐயம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : செல்வாக்கு மேம்படும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
செய்யும் தொழிலில் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
