*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 29_*
*14.07.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளை செய்வதில் சிந்தித்து செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அசுவினி : காலவிரயம் நேரிடலாம்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பூமி விருத்திக்கான பணிகளில் காலதமாதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : இன்பமான நாள்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிடம் : மனக்கசப்புகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொதுச்செயல்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மேல் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை : சேமிப்பு உயரும்.
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எந்த செயலிலும் சற்று நிதானத்துடன் செயல்படவும். குடும்ப பெரியோர்களிடம் கனிவுடன் பழகவும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்கின்ற பணியில் திருப்தியான சூழல் அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : திருப்தியான நாள்.
பூரம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : பிரச்சனைகள் தீரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : சுபமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உடல் தோற்றப் பொலிவிற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய நபர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூராடம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : தனவரவுகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் துரிதம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : இடமாற்றம் ஏற்படலாம்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் இலாபம் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். சம வயதினரால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : நன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
