*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 27_*
*_10.02.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மூத்த சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். புதிய கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் ஏற்படும். அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அசுவினி : சுப விரயம் உண்டாகும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : சேமிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் உயரும்.
மிருகசீரிடம் : புகழப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தலைமை பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புதிய எண்ணங்களுக்கு செயல் திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் உரையாடும்போது சற்று கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மாற்றமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட சிக்கல்களை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : இன்பமான நாள்.
அஸ்தம் : முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : உறவுநிலை மேம்படும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
போட்டிகளில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : கவலைகள் குறையும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : காலதாமதம் ஏற்படும்.
கேட்டை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
உத்திராடம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : இடர்பாடுகள் குறையும்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
ரேவதி : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
