*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 22_*

*09.10.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். செயல்பாடுகளில் வேகமும், புத்திக்கூர்மையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் சாதகமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரணி : உடைமைகளில் கவனம் வேண்டும்.

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். செய்தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சுபச்செய்திகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.

ரோகிணி : இலாபம் உண்டாகும்.

மிருகசீரிடம் : எண்ணியவை ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனை தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேள்வியில் கலந்து கொள்வதற்கான சூழலும், வாய்ப்பும் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : செல்வாக்கு மேம்படும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சுரங்கம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். சொந்த ஊருக்கான பயணங்கள் மனதிற்கு புதுவிதமான மாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன்பிறந்த சகோதரர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் நிதானத்தை கையாள வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழிலில் முன்னேற்றமும், அதற்கான முயற்சிகளும் மேம்படும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : முயற்சிகள் மேம்படும்.

பூரம் : ஆபரண சேர்க்கை உண்டாகும்.

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை தரும்போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.

சுவாதி : மனச்சோர்வு உண்டாகும்.

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். சர்வதேச வணிகத்தில் இருந்துவந்த சில தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். போட்டித்தேர்வில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : முயற்சிகள் கைகூடும்.

அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வெளிநாடு சம்பந்தமான பயணங்களில் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும். தொழில் பயணங்களால் அலைச்சல்கள் மற்றும் உடல்சோர்வு நேரிடலாம். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : மேன்மை உண்டாகும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான தீர்வு கிடைக்கும். இணையதளம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

திருவோணம் : செல்வாக்கு உயரும்.

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
—————————————

கும்பம்

எதிர்ப்புகளை தாண்டி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேம்படும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : வெற்றி காண்பீர்கள்.

சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமான பலனை அளிக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•