*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 23_*
*10.10.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : வெற்றி காண்பீர்கள்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : ஆதரவுகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செய்யும் வேலையில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்கள் நினைத்த பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இணையதளம் தொடர்பான செயல்பாடுகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் விமர்சனங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : காலதாமதம் உண்டாகும்.
ஆயில்யம் : சேமிப்பு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சிறுசிறு தடைகள் தோன்றி மறையும். கூட்டாளிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : பாராட்டப்படுவீர்கள்.
பூரம் : தடைகள் நீங்கும்.
உத்திரம் : வேலைப்பளு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். வேலைதேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மலரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல்களால் முன்னேற்றமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் மலரும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
திட்டமிட்ட செயல்களை செயல்படுத்துவதில் இருந்த காலதாமதம் அகலும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : காலதாமதம் அகலும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிட்சமான சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாடு மனதில் தெளிவை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சுபிட்சமான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : உற்சாகம் பிறக்கும்.
பூராடம் : அபிவிருத்தி உண்டாகும்.
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழில் முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது சற்று நிதானத்துடன் உரையாடவும். புதிய முதலீடுகளில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் அமையும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வெளியூரிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் செல்வமும், செல்வாக்கும் உயரும். மனதில் இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கல்வி சம்பந்தமான செலவுகள் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : கலகலப்பான சூழல் உண்டாகும்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : செலவுகள் நேரிடும்.
•┈┈•❀??????❀•┈┈•
