- *_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 20_*
*_03.04.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். போட்டி பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் அமைதி வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வீண் கவலைகள் தோன்றும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அமைதியை கடைபிடிக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
இறை வழிபாட்டில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் நன்மை கிடைக்கும். கூட்டாளிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : நன்மை உண்டாகும்.
பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறையும். காரிய தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். வாரிசுகள் மூலம் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். மந்தத்தன்மையால் பணியில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : சுப விரயம் உண்டாகும்.
விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். குடும்ப பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அனுஷம் : அறிவு மேம்படும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். வேள்விகளில் கலந்துகொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மூலம் : இலாபம் கிடைக்கும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில மாற்றங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிறு தூர பயணங்களால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.
சதயம் : பெருமை அடைவீர்கள்.
பூரட்டாதி : சாதகமான நாள
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
