*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 19_*
*_02.04.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுயதொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகள் சாதகமாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வெளிப்படையான பேச்சுகளின் மூலம் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : வெற்றி காண்பீர்கள்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய தொழில் முயற்சிகளால் மேன்மை ஏற்படும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். அந்நியர்களின் உதவியால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : ஆதரவு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொது தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாகனப் பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வணிகத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உங்களின் செயல்பாடுகள் பிறரின் விமர்சனத்திற்கு உள்ளாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
பூசம் : அமைதியை கடைபிடிக்கவும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதற்கான சூழல் அமையும். கூட்டாளிகளால் இலாபம் அதிகரிக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் வகையில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். வாரிசுகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : இன்பமான நாள்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : தனவரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : இலாபம் அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கடிதத்தின் மூலம் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவால் பொருளாதாரம் மேன்மையுறும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : பொருளாதாரம் மேன்மையுறும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நிர்வாகத் துறையில் மாற்றங்களை செய்வீர்கள். பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அனுபவ ரீதியான நுணுக்கமான தொழில்நுட்பங்களை பயில்வீர்கள். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் சாதகமான பலனை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். புதிய சிந்தனைகள் தோன்றும். நீர் நிலைய பணிகளில் உள்ளவர்களுக்கு இலாபகரமான நாள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மலரும்.
ரேவதி : இலாபகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
