காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால்  இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

காளான் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை -1
ஏலக்காய் – 3
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
காளான் – 250 கிராம்
சமைக்க ஆகும் நேரம் – 25 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2
காளான் குழம்பு செய்முறை:
                ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
                இதனுடன்  தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நாம் மேல்குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கூடவே பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து மீண்டும் அதனை நன்றாக  வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியினை சேர்க்கவும்.
                பிறகு இதனை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகா விடவும். பிறகு, காளான் சேர்த்து நன்றாக கலந்து வேகவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 8 முதல் 10நிமிடம் வரை விட்டு பிறகு மூடியினை திறந்தால் சுவையான காளான் குழம்பு தயார்.