ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:
  •  பால் – 1 லிட்டர்
  • சக்கரை – 1 கப்
  • எலுமிச்சம் பழச்சாறு – 1

ரசகுல்லா செய்முறை:

            பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும். நன்றாக கொதிக்கும் போது அதில் எலுமிச்சை சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவேண்டும். அவ்வாறு எலுமிச்சை சாறை சேர்க்கும்போது பால் திரிய ஆரம்பிக்கும். பாலினை அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
            முழுவதுமாக திரிந்த பாலை ஒரு பவுலின் மீது துணி போட்டு அதில் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய உடன் அந்த துணியில் இருக்கும் திரிந்த பாலை நன்றாக அழுத்தி ஈரப்பதம் இல்லாமல் உலர்த்திக்கொள்ள வேண்டும்
            பிறகு ஒரு பாத்திரத்தில் சக்கரை போடு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அவ்வாறு செய்தால் சக்கரை பாகு தயாராகிவிடும். பிறகு உலர்த்திய பாலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் சக்கரை பாகில் போடவேண்டும். அதனை 20 நிமிடங்கள் வரை மூடி வைத்தால் சுவையான ரசகுல்லா தயார்.
            தயாரான ரசகுல்லாவை 5 மணி நீரம் கழித்தே சாப்பிட வேண்டும். அப்போதுதான் ரசகுல்லா முழுமையான சுவையுடன் இருக்கும் .