சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை  மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.ஆய்வின்போது மாவட்ட ஆட்சியாளர் கார்மேகம் ,சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ,சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள்  உடனிருந்தனர்.