மீன் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

  •  ½ மீன்
  •  1 ½ ஸ்பூன் மல்லிப் பொடி
  •  ½ ஸ்பூன்  சீரகப் பொடி
  •  1 ஸ்பூன் வத்தல் பொடி
  •  ½ ஸ்பூன் மஞ்சள் பொடி
  •  1 எலுமிச்சை
  •  எண்ணெய் தேவையான அளவு
  •  கறிவேப்பில்லை
  •  உப்புதேவையான அளவு

மீன் ரோஸ்ட் செய்முறை:

            முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

             இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

             மல்லிப் பொடி, சீரகப்பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றை அரைத்த இஞ்சி பூண்டு கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.

             மசாலாவில் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.

            பின் மீன் துண்டின் இருபுறமும் மசாலாவை தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

            கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை பொரித்தெடுக்கவும்.

            சுவையான மீன் ரோஸ்ட் தயார்.