வாழைப்பூ வடை செய்ய தேவையான பொருட்கள்:

  •  2 கப்  சுத்தம் செய்த வாழைப்பூ,
  •  2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  •  ¼ கப் நறுக்கிய வெங்காயம்
  •   2 மேஜைக்கரண்டி அரிசி
  •  எண்ணெய்
  •  ¾ கப் கடலை பருப்பு
  •  ¼ ஸ்பூன்  பெருங்காயம்
  •  2 ஸ்பூன் கொத்தமல்லி,கருவேப்பிலை
  •  1 சிகப்பு மிளகாய்
  •  1 ஜீரகம்
  •  உப்பு

செய்முறை:

             கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

            மிக்சியில் மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும், பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் சேர்த்து, இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும்.

            மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம்,

            பிறகு அறிந்த வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும்.

            ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும், கைகளை தண்ணீரில் நனைத்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை, மொத்தமாக வடையாக தட்டவும்.

            கடாயில் எண்ணெயை காய வைத்து, சூடான எண்ணெயில் கவனமாக போடவும்.

           சிவந்ததும், பிரட்டி, இன்னொரு பொன்னிறமாகும் வரை, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

           சுவையான வாழைப்பூ வடை தயார்.