வேர்க்கடலை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  •  1 கப்  அரிசி மாவு
  •  ¼ கப் வேர்க்கடலை
  •  1 ஸ்பூன்  சிகப்பு மிளகாய் தூள்
  •  1 ஸ்பூன் எள்
  •  ¼ ஸ்பூன் பெருங்காயம்
  •   வெண்ணெய்
  •  உப்பு தேவையான அளவு
 வேர்க்கடலை முறுக்கு செய்முறை :

             வேர்க்கடலையை முதலில் நன்கு மிக்சியில் பொடி செய்து, பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும்.

             பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த விழுது, மிளகாய்த் தூள், எள், பெருங்காயம், வெண்ணெய் (இளகிய நிலையில்) சேர்த்து முதலில் நன்கு கலக்கவும்.

             பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, மாவாகப் பிசையவும். முறுக்கு அச்சில், மாவை நிரப்பி, எண்ணெய்யில் நேராக முறுக்கு பிழியலாம். அல்லது, சில தட்டையான கரண்டிகளில் எண்ணெய் தடவி, அதன் மேல் அழகாகப் பிழிந்தும் எண்ணெய்யில் போடலாம்.

             எண்ணெய் சூடாக இல்லை என்றால் முறுக்கு எண்ணெய்யில் பிரிந்துவிடும். அதனால், முறுக்கு பிழியும் பொழுது எண்ணெய் சூடாக இருக்க வேண்டும்.

             வேகும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இடையே திருப்பி போட்டு, சத்தம் அடங்கியதும் எடுத்து விடவும். இப்போது மொறு மொறுப்பான முறுக்கு தயார்.