காலிஃபிளவர் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

  • 1 காலிஃபிளவர்
  •  எண்ணெய்
  •  ½ கப்  கடலை மாவு
  •  ¼ கப்  அரிசி மாவு
  •  ¼ கப்  சோள மாவு
  •  2 ஸ்பூன்  மிளகாய் தூள்
  •  கேசரி தூள்
  •  1 வெங்காயம்
  •  2 பச்சை மிளகாய்
  •  1 ஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது
  •  1 ஸ்பூன்  உப்பு

காலிஃபிளவர் பக்கோடா செய்முறை :

ஒரு காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர், உப்பு சேர்த்து காலிஃப்ளவரை 2 நிமிடம் வேக வைக்கவும்.

2 நிமிடம் கழித்து வேக வைத்த காலிஃப்ளவரை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, கால் கப் சோள மாவு, ஒரு டீஸ்பூன் உப்பு, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, ஒரு சிட்டிகை கேசரி பவுடர் போட்டு அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்தது நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, 2 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்த காலிஃப்ளவரை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

அடுத்தது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தயாரித்துள்ள காலிஃப்ளவரை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

அருமையான காலிபிளவர் பக்கோடா தயாராக உள்ளது சூடாக கொடுத்து சாப்பிட்டு பாருங்க.