பிசிஓஎஸ் என்பது பெண்களுக்கு ஏற்படக் கூடிய ஒருவகை வியாதி ஆகும். இது வியாதி என்று சொல்வதை விட ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று கூறுவது சரியான விளக்கமாகும். இந்த பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி பிரச்சனைகள் உலகம் முழுவதும் பல பெண்களுக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்பொழுது கிட்டத்தட்ட அனைத்து பெண்களுக்கும் இந்த பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி பிரச்சனைகள் காணப்படுகிறது என்று கூறுகின்றனர். இந்த பிரச்சனை இருந்தால் மாதவிடாய் உடல் எடை ஏற்றம் சரியான எடை இல்லாமல் இருப்பது போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் மன ரீதியான பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.

​கருப்பை நீர்க்கட்டிகள்

திருமணத்திற்கு முன்பு இந்த பிரச்சினை இருக்கும் பெண்கள் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு ஏராளமான ஆங்கில மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வருகிறார்கள். ஆனால் பலருக்கும் நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்று கூறுகின்றார்கள். ஒருமுறை மருத்துவமனைக்கு சென்றால் இந்த பிரச்சனை முடிவதில்லை மாறாக மருத்துவமனைக்கு மாதம் ஒரு முறையோ இரண்டு மாதத்துக்கு ஒரு முறையோ நாம் சென்று கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டி உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் பிரச்சனை பெண்களுக்கு தலைதூக்கி விடுகிறது என்று கூறுகின்றார்கள். இது ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது இதை குறைப்பதற்கு நம் சமயலறையிலேயே சில தீர்வுகள் உள்ளது அதை பற்றிய தற்பொழுது பார்க்கலாம்.

தேன்

தேனிலும் பெரும்பாலும் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. நம் தினசரி உணவில் சர்க்கரைக்கு பதில் தேனை மாற்றம் செய்தால் மிகவும் நன்மையாக இருக்கும். தினமும் காலையில் நாம் குடிக்கும் காபி டீக்கு பதில் கிரீன் டீயை மாற்றம் செய்ய வேண்டும். அதில் சர்க்கரைக்கு பதில் சிறிதளவு தேனை ஊற்றி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் இதில் உள்ள நன்மைகள் ஏராளம். நிச்சயமாக பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று பல மருத்துவர்களும்       கூறுகின்றனர்.

​ஆளி விதைகள்

ஆளி விதைகளில் அதிகமான நார்ச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நார்ச்சத்துக்கள் நம் அஜீரணத்திற்க எதிராக உதவி செய்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் உடல் எடையை இயற்கையாக குறைத்தாலே அவர்களின் பிரச்சனையை பெருமளவு குறைந்து விடுகிறது என்று கூறுகின்றனர். உடல் எடை குறைய வேண்டும் என்று கூறினால் நமது ஜீரண சக்தி மிகவும் நல்ல முறையில் இருப்பது அவசியமாக இருக்கிறது. ஆளி விதைகளில் நார்ச்சத்து மட்டுமல்லாமல் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இதில் நிறைந்து உள்ளன. இதில் புரத சத்தும் காணப்படுகிறது. இது பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்களுக்கு பெருமளவில் உதவி செய்யும் என்று மருத்துவர் கூறுகிறார்.

இலவங்கப்பட்டை

இலவங்கப் பட்டையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது என்று ஏற்கனவே நாம் பலரும் பார்த்துள்ளோம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று ஏற்கனவே நாம் பார்த்து வந்தோம். மருத்துவர் மிஸ்ரா என்பவர் இந்த லவங்கப்பட்டை பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்களுக்கு பெருமளவில் உபயோகம் உள்ளதாக இருக்கிறது என்று கூறுகின்றனர். இது சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் இன்சுலின் தடுப்பு சீராகவும் வைத்திருக்கிறது என்று கூறுகிறார். பால் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம். அல்லது கேக் பிஸ்கட் போன்ற பொருள்கள் செய்தால் அதுலயும் இதை பொடியாக்கி சேர்த்து சாப்பிடலாம் என்று கூறுகிறார். இதை தேனில் கலந்து சாப்பிடலாம் என்றும் கூறுகிறார். இதில் பெரிய அளவில் எந்த கலோரியும் இல்லை என்றும் கூறுகிறார். இது உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று கூறுகிறார்.

வெந்தயம்

ஒரு பெண்ணுக்கு பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி பிரச்சனை வந்துவிட்டது என்றால் அவர்கள் உடலில் சுரக்கும் இன்சுலின் மற்றும் சர்க்கரை என்பது சரியான அளவில் சுரக்கவில்லை இது பலவிதமான டிஷ்யூ பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகமாவது அதிகமான டெஸ்டோஸ்டிரோன் தயாராவது போன்ற பலவிதமான பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. மற்றும் வெந்தய விதையை இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது என்று கூறுகின்றனர். இந்த வெந்தயம் நம் உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது இதற்கு பெரிதும் உதவுகிறது என்று மருத்துவர் கூறுகிறார். வெந்தயம் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இன்சுலினின் அளவை சீராக்குகிறது இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலை மதியம் மற்றும் இரவு மூன்று வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மிகவும் நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

​துளசி

பெரும்பாலும் துளசியில் ஏற்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. முந்தைய காலங்களில் நமது வீட்டிலும் துளசி மாடம் இருக்கும் துளசி என்பது மருத்துவ குணம் கொண்ட ஒரு அற்புத மூலிகை ஆகும். துளசியை கிருமி நாசனம் செய்வதற்காக பலரும் உபயோகம் செய்து வருவார்கள் இது பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று மருத்துவர் மல்லிகா கூறுகிறார். இதில் உள்ள ஒரு புரதமானது. பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்களுக்கு அவர்களின் பிரச்சனை தீர பெரும் உதவியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது என்று கூறுகிறார்கள். இது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது தினமும் காலை ஒரு பார்த்து இலைகளை மட்டும் பச்சையாக சாப்பிட்டு வருவது நன்மை விளைவிக்கும் என்று கூறுகிறார்கள்.