பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை. விதைப்பையில் வரும் பால் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இவை தான் போதை தருவனவாக இருக்கிறது. பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது. தற்போது இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதை அளவாக தேவைக்கு பயன்படுத்தினால் பல மருத்துவ நன்மைகளை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

​மூளைக்கு நன்மை

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உண்டு. இந்த ஊட்டச்சத்துகள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. மூளையின் சீரான இயக்கத்துக்கு இவை உதவுகிறது.

கசகசாவில் இருக்கும் ஒலிக் அமிலமானது உடலில் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவை தவிர தைராய்டு, வாய்ப்புண் கோளாறுகள், கண்பார்வை சீர்பட, சிறுநீரககல் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், வலி நிவாரணியாக, செரிமானத்தை எளிதாக்க என பலவகையில் பயன் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையால் அனைத்து வயதினரும் இன்று அவதிபடுகிறார்கள். ஆய்வுகளின் படி கசகசா கலந்த பாலை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உறக்கமின்மை பிரச்சனையையும் இவை சரிசெய்கிறது.

தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கசகசாவை அரைமணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மைய அரைக்கவும். அதை சூடான பாலில் கலந்து ( ஒரு டீஸ்பூன் அளவு) பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை காணாமல் போகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.

ஆண்மை பெருகிட

25 வருடங்கள் முன்பு வரை, ஏன் இன்றும் பல கிராமங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு இரவு அல்லது காலை வேளையில் கசகசா, பாதாம் சேர்த்த பால் தருவது வழக்கம். பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க தருவார்கள்.

இல்லற வாழ்வில் ஈடுபாடு வருவதோடு ஆண்மையை அதிகரிக்கவு பாலியல் ஆசையை த