


கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k. பழனிச்சாமி அவர்களால் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பெற்ற
ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு இன்று மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுக்காக வருகைப்புரிந்தார். அவரின் வருகையை வரவேற்பதற்க்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகை அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்
பெயர் பதிக்கப்பட்ட கல்வெட்டை நியூஸ் பேப்பர் கொண்டு மறைத்திருக்கும் கல்வெட்டை மறைக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அரசியல் பழிவாங்கும் எண்ணங்களையோ ஈகோ போன்ற செயல்பாடுகளை கலைந்து நடந்துகொள்வோம் என பேசிவரும் திமுக தலைமை நிர்வாகிகள் இதுபோன்ற காகிதம் ஒட்டி கல்வெட்டுகளை மறைப்பதற்கு பெயர் என்னவாம் என்று அக்கரைக்கு இக்கரை பச்சை எனக் கூடியிருந்த மக்கள் பலரும் முனு முனுக்கத்தான் செய்தனர்.
